தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல் (BSNL) வழங்கும் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி கொண்ட ரூ. 1499 மற்றும் ரூ. 1999 ஆகிய 2 நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களின் ஒப்பீடுகளை பற்றி பார்போம்.
தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில், பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்களையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்நிறுவனம் குறைந்த பட்ஜெட்டில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருவதால், பி.எஸ்.என்.எல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சரி, இப்போது விஷயத்திற்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி தரும் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. அதாவது ரூ.1499 மற்றும் ரூ.1999 என 2 திட்டங்கள் உள்ளன. இந்த 2 திட்டங்களும் என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன, இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்பதை இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் மெமொத்தம் 32ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.
இதன் மற்ற முக்கிய நன்மைகள்:
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் வழங்கப்படுகின்றன. தினமும் 100 எஸ்.எம்.எஸ் (SMS) இலவசமாகக் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ஓடிடி (OTT) நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை..ஒதுக்கப்பட்ட 32ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் (40Kbps) ஆக குறையும். இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்பவர்களுக்குக் கூடுதல் டேட்டா தேவைப்பட்டால், தனிப்பட்ட டேட்டா வவுச்சர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக, இந்தத் திட்டத்தின் வேலிடிட்டி 330 நாட்கள் ஆகும். எனவே, நீங்கள் இந்த பி.எஸ்.என்.எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 495ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மற்ற முக்கிய நன்மைகள்:
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் வழங்கப்படுகின்றன. தினமும் 100 எஸ்.எம்.எஸ் (SMS) வழங்கப்படும். தினசரி வழங்கվடும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் (40Kbps) ஆகக் குறையும்.
பி.எஸ்.என்.எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தை விட, ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டம் கூடுதல் டேட்டாவையும், அதிக நாட்கள் வேலிடிட்டியையும் வழங்குகிறது. எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வதே மிகவும் நல்லது. ஒருவேளை, குறைந்த பட்ஜெட்டில் தினமும் 3ஜிபி டேட்டா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டியை எதிர்பார்க்கும் பயனர்கள், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
பி.எஸ்.என்.எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். எனவே, நீங்கள் இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி வழங்கվடும் 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் (40Kbps) ஆகக் குறையும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது தவிர, தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) இந்தத் திட்டத்தில் கிடைக்கும்

