வசந்த் & கோ
இந்தியாவின் நம்பர் ஒன் டீலரான வசந்த் & கோ மற்றும் உலகத்தர வீட்டு உபயோக பொருட்களின் தயாரிப்பாளர்கள் இணைந்து நடத்தும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனை சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை டிரேட் சென்டரில் நடைபெற உள்ளது.
சென்னை டிரேட் சென்டர்
நாளை(30-ந்தேதி) முதல் வருகிற 2-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம் ஆகும். ஏ.சி., எல்.இ.டி. டி.வி,. குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், மைக்ரோவேவ் ஓவன், மொபைல், லேப்டாப், டிஷ் வாஷர், வாட்டர் பியூரிபைர் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோக பொருட்களும் சுலப தவணை முறையில் விற்பனை செய்யப்படுகின்றன.
பைனான்ஸ் வசதிகள்
வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு சலுகைகள், பம்பர் பரிசுகள் மற்றும் எளிய பைனான்ஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கண்காட்சி நடைபெறும் 4 நாட்களும் தினமும் ஒரு ஐபோன் மற்றும் லெனோவா டேப்பை வெல்லும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். மேலும் ரூ.5ஆயிரத்துக்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு “ஸ்லோகன்” போட்டி மூலம் சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.
தீபாவளி சிறப்பு பம்பர் பரிசு
தீபாவளி சிறப்பு பம்பர் பரிசாக 25 வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு பவுன் வீதம் மொத்தம் 25 பவுன் தங்கம், 32 இன்ச் எல்.இ.டி. டி.வி., ஏ.சி., குளிர்சாதன பெட்டி, வாஷிங் மெஷின், ஸ்மார்ட் போன், டேப், கிரைண்டர், கியாஸ் ஸ்டவ், மிக்சி, டிரஸ்ஸிங் டேபிள் மற்றும் டீப்பாய் உள்ளிட்ட பரிசுகள் 25 பேருக்கு வீதம் வழங்கப்பட உள்ளன. சில குறிப்பிட்ட பொருட்கள் வாங்குபவர்களுக்கு டிரிபிள் ஜீரோ சலுகை (முன்பணம் இல்லை, செயலாக்க கட்டணம் இல்லை, ஜீரோ டி.பி.டி.) வழங்கப்படுகிறது.
ஜீரோ சதவீத வட்டி, தவணை முறை
பஜாஜ் பைனான்ஸ், எச்.டி.பி. பைனான்ஸ், ஐ.டி.எப்.சி. பைனான்ஸ், டி.வி.எஸ். கிரெடிட் மற்றும் முன்னணி கிரெடிட் கார்டுகள் (எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ. மற்றும் பல்வேறு வங்கிகள்) மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ் பேக் சலுகைகள் வழங்கப்படும். மேலும் ஜீரோ சதவீத வட்டி மற்றும் ஏராளமான தவணைமுறை வசதிகளுடன் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்.
155 நேரடி கிளைகள்
தமிழகம் முழுவதும், புதுச்சேரி மற்றும் பெங்களூரு சேர்த்து மொத்தம் 155 நேரடி கிளைகளுடன் வசந்த் & கோ நிறுவனம் இயங்கி வருகிறது. மக்களின் தேவையை அறிந்து ஒரே இடத்தில் கொள்முதல் செய்வது மற்றும் 49 ஆண்டு கால அனுபவத்தால் கிடைக்கும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே குறைந்த விலையில் பொருட்கள் வழங்குவதற்கான முக்கிய மான காரணம் என்று வசந்த் & கோ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

