டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக 620 மின்சார பஸ்களையும் இயக்குவதற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் முதல் கட்டமாக 625 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து 2-வது கட்டத்தில் 750 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் 130 பஸ்கள் ஆலந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது.

மின்சார பஸ்கள்

தற்போது 755 மின்சார பஸ்கள் சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் 5 பணிமனைகளில் இருந்து மின்சார பஸ்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெரம்பூர், கே.கே.நகர், ஆவடி, ஐயப்பன் தாங்கல், பாடியநல்லூர் ஆகிய 5 பணிமனைகளில் மின்சார பஸ்களுக்கு சார்ஜர் செய்யும் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

மாநகர போக்குவரத்துக் கழகம்

டிசம்பர் மாதத்திற்குள் புதிதாக 620 மின்சார பஸ்களையும் இயக்குவதற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தற்போது 4,100 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகளவில் பயணம் செய்கிறார்கள்.

தினமும் 30 லட்சம் பேர் மாநகர பேருந்தில் பயணிக்கிறார்கள். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு கூடுதலாக 2½ லட்சம் பெண்கள் பயணம் செய்கின்றனர்.