ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போலவே டபுள்யூபிஎல் கிரிக்கெட் தொடரும் மிகவும் பிரபலம் ஆகும். மகளிர் பிரமியர் லீக் தொடருக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் 5 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளனர்.

ஆர்சிபி அணி நேற்று 4 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தது. வரும் 2027ம் ஆண்டு பங்கேற்க உள்ள ஆர்சிபி அணியின் முழு பட்டியலை கீழே காணலாம்.

ஆர்சிபி அணி முழு விவரம்:

ஸ்மிரிதி மந்தனா ( கேப்டன்), ரிச்சா கோஷ், எல்லீஸ் பெர்ரி, லாரன் பெல், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, நடின் டி கிளெர்க், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஜார்ஜியா வோல், ஜேஸ் ஜோனசன், தேஜல் ஹஸ்பானிஸ், சயலி சாத்கரே, க்ளோ ட்ரையான், ப்ரேமா ராவத், வ்ருந்தா, குமார் ப்ரத்யூஷா

விக்கெட் கீப்பர்கள்:

ரிச்சா கோஷ், ப்ரத்யூஷா குமார்

பேட்டிங் வீராங்கனைகள்:

வ்ருந்தா தினேஷ், தேஜல் ஹஸ்பானிஸ், ஸ்மிரிதி மந்தனா, ஜார்ஜியா வோல்

ஆல்ரவுண்டர்கள்:

க்ளோ ட்ரையான், ஜெஸ் ஜோனசன், ஸ்ரேயாங்கா பாட்டீல், சயலி சத்காரே, ப்ரேமா ராவத், நடின் டி கிளார்க், எல்லீஸ் பெர்ரி

ராதா யாதவ், பூஜா வஸ்த்ரகர், லாரன் பெல், அருந்ததி ரெட்டி

ப்ளேயிங் லெவனில் களமிறங்க வாய்ப்புள்ள அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஜார்ஜியா வோல், எல்லீஸ் பெர்ரி, தேஜல் ஹஸ்பானிஸ், ரிச்சா கோஷ், நடின் டி கிளார்க், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், சயலி சத்கரே, அருந்ததி ரெட்டி, லாரன் பெல்

கோப்பையை தக்க வைக்குமா?

ஆர்சிபி அணி கடந்த 2024 மற்றும் நடப்பாண்டில் நடந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. நடப்பு சாம்பியனாக அடுத்தாண்டு களமிறங்கும் ஆர்சிபி அணி கோப்பையைக் கைப்பற்ற ஆவலுடன் களமிறங்கியுள்ளது.

ஆர்சிபி அணி அதிகளவு ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. நேற்று நடந்த ஏலத்திலும் ஜெஸ் ஜோனசன், ட்ரையான் ஆகிய இரு ஆல்ரவுண்டர்களை ஏலத்தில் எடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி ஏற்கனவே அணியில் ஸ்ரேயங்கா பாட்டீல், எல்லீஸ் பெர்ரி, சயலி சத்காரே உள்ளனர். இதனால், அவர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பிரிவு வலுவாக உள்ளது.

பேட்டிங், பந்துவீச்சு பலம்:

விக்கெட் கீப்பர்களாக ரிச்சா கோஷ் மற்றும் பிரத்யூஷா குமார் இருந்தாலும் பிரதான விக்கெட் கீப்பராக ரிச்சா கோஷ் இடம்பெறுவார். பிரதான பேட்டர்களாக ஸ்மிரிதி மந்தனா, ஜார்ஜியா வோல் உள்ளனர். நேற்று நடந்த ஏலத்தில் வ்ருந்தா தினேஷ், தேஜல் ஹசப்னிஸ் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ப்ளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை. தேஜல் ஹசப்னிஸ் முக்கிய வீராங்கனையாக திகழ்வார் என்று கருதப்படுகிறது.

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் பிரதான பந்துவீச்சாளராக லாரன் பெல் உள்ளார். அவருடன் ராதா யாதவ், பூஜா உள்ளனர். அருந்ததி ரெட்டி, எல்லீஸ் பெர்ரி, ஸ்ரேயங்கா பாட்டீலும் உள்ளனர்.