ஹைலோ ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் போட்டித்–தொடர், ஜெர்மனியின் சார்ப்ரூக்–கன் நகரில் நடந்து வருகிறது.
இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரர் கிரண் ஜார்ஜை 21-15, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
முன்னதாக, பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் வீராங்கனையான பி.வி சிந்து, பிரான்சின் ரோஸி ஆக்டேவியா பன்கசாரி மோதினர்.
இதில் பி.வி.சிந்து 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் கால் இறுதியில் டென்மார்க்கின் அமலி ஷூல்சுடன் மோதுகிறார். மற்ற இந்திய வீராங்கனைகளான மாளவிகா பன்சோட், இஷாரானி பருவா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தொடரிலிருந்து வெளியேறினர்.

