ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணம்
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் ‘நூறு கோடி வானவில்’
‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘நூறு சாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி, தற்போது ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், சித்தி இட்னானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
நவம்பர் 6 ரிலீஸ்
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார். அதனுடன் படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க வெளியீட்டுக்குப் பதிலாக நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இப்படத்தைக் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
படத்தின் டிரெய்லர் வெளியீடு
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளியானது.
Celebrate this Diwali as a celebration of love, with #NooruKodiVaanavil lighting up your festive moments with heartwarming emotions! ✨❤️#NooruKodiVaanavil premieres November 6th! Make this Diwali a celebration of love!@iamharishkalyan #DirectorSASI @SiddhiIdnani @madhavmedia… pic.twitter.com/uSYhX94rfj
— Zee 5 South (@Zee5South) October 29, 2026

