நடிகை சாய் பல்லவி தன் வருங்கால கணவர் எதிர்பார்ப்பு குறித்து பேசியிருக்கிறார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ராமாயணா’.இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

நவம்பர் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன.

வருங்காலக் கணவர் குறித்து எதிர்பார்ப்பு என்ன?

இந்த நிலையில், அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி படமாக்கப்பட்டிருக்கிறது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக உருவாகியிருக்கும் இதில், நடிகை சாய் பல்லவி உள்ளிட்ட ராமாயணப் படக்குழுவினர் சிலர் பங்கேற்றிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு வீடியோவில் அமிதாப் பச்சன் சாய் பல்லவியிடம் 'வருங்காலக் கணவர் குறித்து எதிர்பார்ப்பு என்ன?' எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நடிகை சாய் பல்லவி, “முதலில் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதிக சுயநலம் கொண்டவராக இருக்கக் கூடாது. சுயபரிசோதனை செய்துகொள்பவராகவும், தனது செயல்களை சரியாக ஆராய்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது தான் வாழ்க்கையில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைப் பற்றிய புரிதல் அவரிடம் இருக்க வேண்டும். அவர் தவறுகள் செய்யலாம், ஆனால் அதைத் திருத்திக்கொள்ளவும் வேண்டும். தனது தவறுகளுக்காக மற்றவர்கள் மீது பழிப் போடுபவராக அவர் இருக்கக் கூடாது. எனக்கு மிகப்பெரிய பட்டியல் எதுவும் இல்லை, ஆனால் அவர் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும். அதோடு சமைக்கவும் தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்றார்.

View this post on Instagram