மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத படக்குழு அறிவித்துள்ளது.

வெற்றிப்படங்களுக்கு பிறகு புதிய முயற்சி
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை', 'பைசன் காளமாடன்' உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள மாரி செல்வராஜ், தற்போது தனது ஆறாவது படைப்பாக 'மஞ்சணத்தி'யை இயக்க உள்ளார்.
இளையராஜாவுடன் முதல் முறையாக இணையும் மாரி செல்வராஜ்
இந்த படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, இளையராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மாரி செல்வராஜ் - இளையராஜா கூட்டணி முதல் முறையாக இணைவதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது, மாரி செல்வராஜ் தன் சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டூடியோஸ் மூலம் ‘மஞ்சணத்தி’ என்கிற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் கதிர், பிரியங்கா மோகன், கயாடு லோஹர், பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

“மஞ்சணத்தி” படப்பிடிப்பு
‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் 7ம் தேதி தேனியில் தொடங்கியது. இளையராஜா - மாரி செல்வராஜ் இணையும் முதல் படமான ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பை இளையராஜா கிளாப் போர்டு அடித்து தொடங்கி வைத்தார். மேலும், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
திருநெல்வேலியில் இருந்து காஷ்மீர் வரை நிகழும் கதைகளத்துடன் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 90 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இப்படம் 4 பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருவதாகவும், இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் உருவாகி வரும் ‘மஞ்சணத்தி’ திரைப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, படக்குழு இன்று அறிவித்துள்ளது.

The first schedule of MANJANATHI has been completed. #Manjanathi #MariSelvaraj #Ilaiyaraaja pic.twitter.com/NPMS6oCIkd
— Skanda Pictures (@SkandaPictures) October 29, 2026

