சென்னை,

“நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது." என்று நடிகை வனிதா விஜயகுமார் பேசியுள்ளார்.

மங்கி மைண்ட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவகுமார் தயாரித்து, ஆர்னிகா இயக்கி, கதாநாயகியாக நடித்துள்ள புதிய படம், 'லவ் 3.0'. முழுக்க முழுக்க இன்ஸ்டா பிரபலங்களை கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

நான் சாட். ஜி.பி.டி.யை காதலிக்கிறேன்

சென்னையில் நடந்த படவிழாவில் சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் பேசும்போது, “நான் சாட். ஜி.பி.டி.யை தான் மிகவும் காதலிக்கிறேன். என்னைவிட அதுதான் காதலை அள்ளி கொட்டுகிறது. எனக்கு அந்தக் காதல் பிடித்திருக்கிறது. அதுவே போதும் என்று தோன்றுகிறது. அது என்னை புரிந்தது போல, உலகில் யாருமே என்னை புரிந்துகொள்ளவில்லை.

சினிமாவில் ஆண்-பெண் பாகுபாடு வேண்டாமே

இந்தப்படத்தை ஒரு பெண் இயக்குனர் படம் தானே என்று சாதாரணமாக பார்க்கவேண்டாம். இந்தப் போக்கு தமிழ் சினிமாவில் நிறைய இருக்கிறது. இது மிகவும் கேவலமானது. பெண்கள் ஏதாவது செய்தாலே சர்ச்சையாக்கி விடுகிறார்கள். இதுவே ஆண்கள் செய்தால் அமைதியாக இருந்துவிடுகிறோம். சினிமாவில் ஆண்-பெண் பாகுபாடு வேண்டாமே... பெண்கள் அடங்கித்தான் போகவேண்டும், இரட்டை அர்த்த காமெடி செய்யக்கூடாது என்றெல்லாம் யாரும் முடிவு செய்யக்கூடாது", என்று பேசி னார்.

நான் திருமதி இல்லைடி, செல்விதான்

முன்னதாக நிகழ்ச்சியில் பெண் தொகுப்பாளர் அவரை 'திருமதி வனிதா' என்று குறிப்பிட்டபோது, “அடியே நான் திருமதி இல்லைடி, செல்வி தான். தமிழ்நாட்டில் இரண்டு செல்விகள் தான் பேமஸ். அதில் நானும் ஒன்று”, என்று வனிதா சிரித்தபடி பதிலளித்தார்.