ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பசும்பொன் சென்ற மு.க. ஸ்டாலின், அங்கு தேவரின் நினைவிடத்தில் குருபூஜையில் கலந்துகொண்டு தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மூர்த்தி, முன்னாள் எம்எல்ஏக்கள், திமுக நிர்வாகிகள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
