நடிகர் சூர்யாவின் 49ஆவது படத்தை மண்டாடி படத்தின் இயக்குநர் மதிமாறன் இயக்கவிருப்பதாக தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் நவ.6ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யாவின் 49ஆவது படம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெற்றிமாறன் - சூர்யாவின் வாடிவாசல் படப்பிடிப்புக்கு மேலும் காலாவகாசம் தேவைப்படுவதால், இந்தப் படத்துக்கு முன்பாக சூர்யா வேறு படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மண்டாடி படத்தில் சூரியும் நடிப்பு பாராட்டப்பட்டது. படமும் வெற்றியடைந்தது. இதனால், நடிகர் சூர்யா மதிமாறன் இணைந்து நடிக்கவிருப்பதாகவும் இந்தப் படமும் கடலோரம் சார்ந்ததாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசியாக வெளியான விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வசூலில் அசத்தியது.

60 வயதில் அறிமுகமான வத்சலா ராஜகோபால் 93 வயதில் காலமானார்!

Suriya and Mandaadi director Mathimaran to join hands for actor's 49th?