தமிழக சமூகப் பாதுகாப்புத் துறையில் குழந்தைள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இயங்கிவரும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிகளுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:
பணி: Support Persons
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: சமூகப் பணி, சமூகவியல், சட்டம், உளவியல் போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு நேரிலோ, தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி
District Child Protection Officer, District Child Protection Unit, Room No: F0-06, Ground Floor, F-Block, New District Collectorate Campus, Chengalpattu - 603 111.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 30.10.2026
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

