லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை குறைத்தால் விலை உயர்ந்துவிடும் என்று அரசே, கூறுவது விந்தையாக உள்ளது. அப்படி இருக்கும் போது அதிக பாரம் வழக்கு பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும்.

மணல் மற்றும் எம்சாண்ட் ஏற்றக்கூடிய லாரிகள் நாளை மறுநாள் (1-ந்தேதி) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கிரஷர் குவாரிகளில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றினால் மட்டுமே லாரிகளுக்கு லோடு வழங்கப்படுவதை கைவிட வேண்டும்.

லாரிகளில் அதிக பாரம்

லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவதை குறைத்தால் விலை உயர்ந்துவிடும் என்று அரசே, கூறுவது விந்தையாக உள்ளது. அப்படி இருக்கும் போது அதிக பாரம் வழக்கு பதிவு செய்வதை அரசு கைவிட வேண்டும்.

லஞ்சம்

இந்த புதிய அரசு எந்த துறையிலும் லஞ்சம் கூடாது என்று கூறிவரும் நிலையில் போக்குவரத்து மற்றும் காவல் துறையை சார்ந்த போலீசார் அதிக பாரம் ஏற்றும் வாகனங்களின் பட்டியலை வைத்துக் கொண்டு மாமூல் வசூல் செய்வது அரசின் கொள்கைக்கு எதிராக உள்ளது.

வேலை நிறுத்தம்

எனவே முதலமைச்சர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் நவம்பர் 1-ந்தேதி முதல் 4 நாட்கள் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.

மணல்

அதிக பாரம் ஏற்றுவதில்லை என்ற தீர்க்கமான முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. 4-ந்தேதி வரை மணல் மற்றும் எம்சாண்ட் லாரிகள் ஓடாது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் லாரிகள் ஓடாது.

இவ்வாறு அவர் கூறினார்.