போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளை 'Vibe & Chill' மனப்பான்மையோடு அணுகுவது தவறானது என பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு பொறுப்பற்ற உபதேசம் வழங்கும் முதல்வர், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்காமல், போதை மாஃபியாக்களை குண்டர் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் அவர்கள் 'போதைப்பொருள், ஊழல் பக்கம் போயிடாதீங்க... கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே... பட் அடிமையாகாதீங்க’ என கேஷுவலாகப் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தின் முதல்வர் என்கிற பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு மாணவர்களிடம் இப்படியா பேசுவது? ஒருவர் தனிப்பட்ட முறையில் பேசுவதென்பது வேறு, ஒரு பொறுப்பான முதல்வர் பேசுவதென்பது வேறு. விஜய் அவர்கள் இது போன்ற ஒரு அறிவுரையை தனது வாரிசுகளுக்கு வழங்குவாரா? இது சினிமா ஷூட்டிங்கோ அல்லது ஆடியோ லான்ச் மேடையோ அல்ல விஜய் அவர்களே; ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம்!

பிரதானக் கடமை

காவல்துறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு போதை மாஃபியாக்களையும், ஊழல் திமிங்கலங்களையும் சிறையில் தள்ள வேண்டிய நீங்கள், மேடைகளில் அமர்ந்து 'மோட்டிவேஷன் ஸ்பீக்கர்' போலப் பஞ்ச் டயலாக் பேசுவது உங்கள் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. 'தவறுக்கு அடிமையாகாதீர்கள்' என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வது மட்டும் முதல்வரின் வேலை கிடையாது; இளைஞர்களைச் சீரழிக்கும் போதைக் கும்பலை வேரோடு அழிப்பது உங்கள் பிரதானக் கடமை.

Gen Z இளைஞர்களிடம் ‘Cool CM’ எனப் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, போதைப்பொருள் ஒழிப்பு போன்ற தீவிரமான விவகாரத்தைக்கூட ‘Vibe & Chill’ மனப்பான்மையோடு அணுகுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் பி.ஆர் (PR) விளம்பரங்களுக்காகத் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்வைப் பணயம் வைக்காதீர்கள். துணிச்சலிருந்தால் போதை மாஃபியாக்கள் மீது குண்டர் சட்டத்தைப் பாய்ச்சுங்கள்! இல்லையெனில், உங்கள் போலியான ‘Vibe’ அரசியலைத் தூக்கியெறிந்து, உங்களை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்க இந்த Gen Z தலைமுறையே முன்னிற்கும் என எச்சரிக்கிறேன்! எனக் கூறியுள்ளார்.

தவெக அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க மாணவர்களுக்கு இலவச உபதேசமா திரு. @TVKVijayHQ அவர்களே?

சென்னையில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரு. @TVKVijayHQ அவர்கள் 'போதைப்பொருள், ஊழல் பக்கம் போயிடாதீங்க... கொஞ்சம் ஃபன், என்ஜாய்மெண்ட் ஓகே... பட்… pic.twitter.com/ymelGriISZ

— Nainar Nagenthran (@NainarBJP) November 6, 2026