சென்னை,
'ராமாயணா’ படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி ரூபாய்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ராமாயணா
இந்தி சினிமாவை சேர்ந்த டைரக்டர் நிதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ராமாயணா: பாகம் 1’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை மையமாக கொண்டு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணனாக யாஷ் நடித்துள்ளார். அனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். மேலும், ரவி துபே உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் உருவான ராமாயணா படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆனது.
முதல் நாள் வசூல்
இந்நிலையில், ’ராமாயணா’ படத்தின் முதல் நாள் வசூல் எத்தனை கோடி ரூபாய்? என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமாயணா படம் முதல்நாளில் ரூ. 64.85 கோடி வசூல் செய்துள்ளது. குறிப்பாக, இந்தியில் இப்படம் முதல் நாளில் ரூ. 47.50 கோடி வசூல் செய்துள்ளது. தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறை வர உள்ள நிலையில் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

