டிவி, மொபைல் பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கம் உடல்நலத்தையும் செரிமானத்தையும் எப்படிப் பாதிக்கிறது? அதிகமாக சாப்பிடுவது முதல் உடல் பருமன் வரை ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடுவதற்கான வழிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

டிவி அல்லது மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கா? ஆயுர்வேதத்தின்படி, நாம சாப்பிடும் முறை நம்ம ஆரோக்கியத்தை பெரிய அளவுல பாதிக்கும். இந்த 7 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க.

இப்போதெல்லாம் மக்கள் பசியை ஆற்ற மட்டும் சாப்பிடுவதில்லை. சிலர் ஆபீஸ் வேலை பார்த்துக்கிட்டே சாப்பிடுறாங்க, இன்னும் சிலர் டிவி அல்லது மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறாங்க. இதனால சாப்பாட்டு மேல முழு கவனம் இருக்காது. உணவை சரியா மென்று சாப்பிடவும் மறந்துடுறோம். ஆனா ஆயுர்வேதத்தின்படி, சத்தான உணவை சாப்பிடுவது எவ்வளவு முக்கியமோ, அதை சாப்பிடும் முறையும் அவ்வளவு முக்கியம். சரியான முறையில் எப்படி சாப்பிடுவதுன்னு பார்க்கலாம்.

ஆயுர்வேதத்தின்படி, எப்பவுமே அமைதியான, சுத்தமான இடத்துல உக்காந்துதான் சாப்பிடணும். சாப்பிடும்போது டிவி பார்ப்பது, மொபைல் யூஸ் பண்ணுவது அல்லது சத்தமா பேசுவதை தவிர்க்கணும். இந்த பழக்கங்களால சாப்பாட்டு மேல கவனம் சிதறும். ஒவ்வொரு வாயையும் நல்லா மென்று சாப்பிட பழகுங்க. உணவை ரொம்ப வேகமா முழுங்கக் கூடாது, அதேபோல ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டும் சாப்பிடக் கூடாது.

சிலருக்கு ரொம்ப சூடா சாப்பிட பிடிக்கும், இன்னும் சிலர் ஃப்ரிட்ஜ்ல இருந்து எடுத்த குளிர்ந்த உணவை அப்படியே சாப்பிடுவாங்க. ஆயுர்வேதத்தின்படி, உணவு ரொம்ப சூடாகவும் இருக்கக் கூடாது, ரொம்ப குளிர்ச்சியாகவும் இருக்கக் கூடாது. சாதாரண வெப்பநிலையில அல்லது மிதமான சூட்டுல உணவை சாப்பிடுவது செரிமானத்துக்கு ரொம்ப நல்லது.

ஆயுர்வேதத்துல ஆறு சுவைகளை உணவின் முக்கிய பகுதியா சொல்றாங்க. இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் உங்க சாப்பாட்டு தட்டுல இருக்கணும். பழங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடுவதன் மூலம் உணவுல இந்த வெரைட்டியை நீங்க மெயின்டெயின் பண்ணலாம்.

சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரம் முன்னாடி அல்லது சாப்பிட்ட உடனே நிறைய தண்ணீர் குடிப்பதை தவிர்க்கணும். ஆயுர்வேதத்தின்படி, இது செரிமானத்தை பாதிக்கலாம். சாப்பிடும்போது தாகம் எடுத்தால், கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் குடிக்கலாம்.

பகல் நேர சாப்பாட்டை விட, இரவு உணவை ரொம்ப லேசா வெச்சுக்கிறது நல்லது. தூங்குவதற்கு குறைந்தது 2-3 மணி நேரத்துக்கு முன்னாடியே இரவு உணவை சாப்பிட முயற்சி பண்ணுங்க. இதனால உணவு செரிமானம் ஆக உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.

சாப்பிட்ட உடனே படுக்கையில படுப்பது அல்லது தூங்குவதை கண்டிப்பா தவிர்க்கணும். இரவு உணவுக்குப் பிறகு கொஞ்ச நேரம் நடக்கணும்னு ஆயுர்வேதம் சொல்லுது. நீங்க ரிலாக்ஸா ஒரு 100 அடி தூரம் நடக்கலாம்.

சாப்பிட்ட உடனே ஜிம்முக்கு போவது, அதிக எடை தூக்குவது அல்லது கடினமான உடல் உழைப்புல ஈடுபடுவது உடம்புக்கு நல்லது கிடையாது. சாப்பிட்ட பிறகு உடலுக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கொடுக்கணும்.