சென்னை,
தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்க ளைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 901 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 7-ந் தேதி வரை வழக்க மாக இயக்கக்கூடிய 6,573 பஸ்களுடன் கூடுதலாக 9 ஆயிரத்து 86 சிறப்பு பஸ்கள் (அதில், ஆயிரத்து 659 தனியார் ஒப் பந்த பஸ்கள் அடங்கும்) என 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 15 ஆயிரத்து 659 பஸ்கள் இயக்கப்படும்.
அதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், வருகிற 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கக்கூடிய 4 ஆயிரத்து 382 பஸ்களுடன் கூடுதலாக 6,815 சிறப்பு பஸ்கள் (அதில், ஆயிரத்து 241 தனியார் ஒப்பந்த பஸ்கள் அடங்கும்) என 2 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 11 ஆயிரத்து 197 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையொட்டி நேற்று ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அரசுப் பஸ்களில் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து 862 சிறப்புப் பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 2,207 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இன்றும் 3,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பஸ் நிலையம், வண்டலூர் சந் திப்பு, ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் மொத்தம் 1,500 போலீ சார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

