சென்னை: சென்னை திரு.வி.க. நகரில் உள்ள சென்னை பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் பயிலும் 350 மாணவி​களுக்​குக் கர்ப்​பப்பை வாய் புற்​றுநோய் தடுப்பூசி செலுத்​தப்​பட்​டது.

தமிழகம் முழு​வதும் கர்ப்​பப்பை வாய் புற்​றுநோயைத் தடுக்க, அரசு மருத்​து​வ​மனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலை​யங்​கள் வாயி​லாக 14 வயது தொடங்கி 15 வயது பூர்த்​தி​யடைவதற்கு முன்​னதாக மாணவி​களுக்கு இல​வச​மாக ‘ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ்’ (ஹெச்​பிவி) தடுப்​பூசி வழங்​கும் நட​வடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

இதை​யொட்டி சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 71 சென்னை பள்​ளி​களில் பயிலும் 14 முதல் 15 வயதுக்​குட்​பட்ட 3,701 மாணவி​களுக்கு அவர்​களது பெற்​றோரின் ஒப்​புதலுடன் ஹெச்​பிவி தடுப்​பூசி செலுத்​தும் பணி தொடங்​கியது.

இதன் ஒரு பகுதி​யாக திரு.வி.க. நகர் மண்​டலம், 71-வது வார்​டுக்கு உட்​பட்ட பாரதி சாலை​யில், அமைந்​துள்ள நகர்ப்​புற நல​வாழ்வு மையத்​தில், எம்.எச்.சாலை​யில் உள்ள சென்னை பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் பயிலும் 14 முதல் 15 வயதுக்​குட்​பட்ட 350 மாணவி​களுக்​குக் கர்ப்​பப்பை வாய் புற்​றுநோய்க்​கான ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி) தடுப்​பூசி செலுத்​தும் பணிகள் நேற்று நடை​பெற்​றன.

இதனை மாநக​ராட்சி இணை ஆணை​யர் க.கற்​பகம் நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்​தார். நிகழ்ச்​சி​யில் மாநகர மருத்​துவ அலு​வலர், கல்வி அலு​வலர்​கள், கூடுதல் மாநகர மருத்​துவ அலு​வலர் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

ரூ.50 ஆயிரம் கோடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அழிக்க சதித் திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு