திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கள்ளக்காதலனுடன் தாய் கைது செய்யப்பட்டார்.

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சென்னையைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் மீது புகார் எழுந்துள்ளது. சிறுமியின் தாயுடன் தொடர்பில் இருந்த செல்வக்குமார், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், இதற்கு சிறுமியின் தாய் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்காதலனுடன் தாய் கைது

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆவடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறுமியின் தாய் மற்றும் தியாகராயநகரைச் சேர்ந்த செல்வக்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.