விசாவுக்கு எளிமையான அணுகுமுறை
இந்தியாவில் விசாவுக்கான நடைமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில், முதன்மை விசா வகைகளின் எண்ணிக்கை 13-லிருந்து 9-ஆகக் குறைக்கப்பட்டு, விசாக்கான முக்கியப் பிரிவுகளை 13-இல் இருந்து 9-ஆகவும், துணை பிரிவுகள் 23-ஆக குறைக்கவும், விசா விண்ணப்பத்தில் நிரப்பும் பகுதிகளை 70 சதவீதம் அளவுக்கு குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசாவுக்கான நடைமுறைகளில் மாற்றம்
2015-ஆம் ஆண்டு ஜனவரி - 9 அல்லது அதற்கு முன் இந்தியாவிற்கு வந்து பதிவு செய்துள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு பாஸ்போர்ட் மற்றும் விசா விதிகளில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், 1959 – 2003 மே-30 ஆம் தேதிவரை நேபாள இந்திய தூதரகத்தின் அனுமதி சீட்டுகள் மூலம் இந்தியா வந்த திபெத்தியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள்,பாகிஸ்தானை சேர்ந்த குடிமக்கள், திபெத்தியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்தான அறிக்கையில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்து, சீக்கியர், புத்தர், கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் காரணமாக 2024, டிசம்பர்- 31 அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் வந்திருந்தால், அவர்களுக்கு பாஸ்போர்ட் விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு 2009-ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பாக நிரந்தரமாக வசிக்கும் நோக்கத்துடன் வந்த பாகிஸ்தானை சேர்ந்த குடிமக்கள் நிபந்தனை அடிப்படையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா எடுப்பதில் உள்ள அதிகப்படியான நடைமுறைகளை குறைத்து எளிமைப்படுத்தும் நோக்கிலும், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பிற நாட்டினருக்கும் ஆதரவளிக்கும் வகையிலும் மத்திய அரசு இத்திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

