சென்னை,
ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிக்கும் ‘ஓம்’
‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்திலும், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நவம்பர் 20-ம் தேதி வெளியீடு
‘ஓம்’ திரைப்படம் முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது.
சமீபத்தில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நடிகை சாய் பல்லவியின் கதாபாத்திர கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அதில் நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நித்யா ரெட்டி என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோ
இந்த நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும்‘ஓம்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.அதன்படி, இப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா ‘ரோஜா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
She arrives to light up a bright smile ❤️Introducing @sreeleela14 as Roja - Senjudare, third single from #OM drops Tomorrow.▶️ https://t.co/F1AxwVeAASWorldwide release on November 20th A @Rajkumar_KP Film.A @SaiAbhyankkar melodious magical.@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 #NaseeruddinShah #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @tatvaman @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
— Wunderbar Films (@wunderbarfilms) November 3, 2026

