அமெரிக்க செனட் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக தன்பாலின ஈர்ப்பாளரான ஜனநாயக கட்சியின் கிறிஸ் பாப்பாஸ் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் செனட் சபை (மேலவை), பிரதிநிதிகள் சபை (கீழவை) என இரு அவைகளைக் கொண்டது. இதில் பிரதிநிதிகள் சபையில் உள்ள 435 இடங்களுக்கும் செனட் சபையில் 100 உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் என்பதால், தோராயமாக மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.
செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவைப்படும் நிலையில், குடியரசுக் கட்சி 53 இடங்களையும், ஜனநாயகக் கட்சி 47 இடங்களையும் தன்வசம் வைத்துள்ளன.
அதன்படி, இந்த முறை 435 பிரதிநிதிகள் சபை இடங்களுக்கும், 35 செனட் சபை இடங்களுக்கும், அதேநேரத்தில் பல்வேறு மாகாணங்களின் ஆளுநர்கள், உள்ளாட்சிப் பதவிகளுக்குமான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி, நவ. 3 மாலை நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று (நவ.4) காலை முதல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்க செனட் சபை தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிறிஸ் பாப்பாஸ் நியூ ஹாம்ப்ஷயரில் போட்டியிட்டார். தேர்வு முடிவுகளில் கிறிஸ் பாப்பாஸ் 2,83,638 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் ஜான் சுசுனு 2,07,898 வாக்குகளும் பெற்றனர். இதன்மூலம், 56.7 சதவிகித வாக்குகளுடன் கிறிஸ் பாப்பாஸ் வெற்றியைப் பதிவு செய்து அமெரிக்க செனட் தேர்தல் வரலாற்றில் வெற்றி பெற்ற தன்பாலின ஈர்ப்பாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
Chris Pappas, the four-term Democratic congressman, has won New Hampshire’s US Senate race, protecting the open seat from a Republican flip in a closely fought contest against John Sununu, the former senator.
