Family Bikes: வயதான பெற்றோருடன் பைக்கில் பயணிக்க சிறந்த சௌகரியமான சீட் கொண்ட டாப் 5 பைக்குகள்! ஹோண்டா யூனிகார்ன் முதல் புல்லட் 350 வரை முழு விவரங்கள், விலை மற்றும் முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.

Family Bikes: பெற்றோர்கள் அல்லது குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்களை பைக்கில் பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்வது என்பது சாதாரண ரைடிங்கைப் போன்றது அல்ல; அதற்கு கூடுதல் கவனம் தேவை. ஓட்டுநருக்கு சௌகரியமாக இருக்கும் ஒரு பைக் சீட், பின்னால் அமர்பவருக்கு அதே ஆதரவை அளிக்காமல் போகலாம். குறிப்பாக கரடுமுரடான சாலைகள், வேகத்தடைகள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களின் போது பின்னால் அமர்பவர்கள் உடல்வலியால் அவதிப்பட நேரிடும். அதேபோல், சீட்டின் உயரம் அதிகமாக இருந்தாலோ அல்லது பைக்கின் எடை அதிகமாக இருந்தாலோ முதியவர்கள் ஏறி இறங்குவது பெரும் சவாலாக மாறும்.

குடும்பத்தினரின், குறிப்பாக பின் இருக்கை பயணிகளின் (Pillion) சௌகரியமே முக்கியம் என்றால், நீளமான மற்றும் மெதுமெதுப்பான சீட், எளிதில் ஏறி இறங்கக்கூடிய சீட் உயரம், கைக்கு எட்டும் கிராப் ரெயில் (Grab Rail) மற்றும் மேடு பள்ளங்களின் அதிர்வுகளை முதுகுக்கு கடத்தாத சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு கொண்ட பைக்குகளைத் தேர்வு செய்வது அவசியம். அந்த வகையில், பெற்றோருடன் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க உதவும் 5 சிறந்த பைக்குகள் பற்றி பார்ப்போம்.

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

புதிய பைக் வாங்குவதற்கு முன்பாக, முடிந்தவரை பெற்றோரை உடன் அழைத்துச் சென்று டெஸ்ட் ரைடு செய்து பார்ப்பது நல்லது. சீட்டின் உயரம் முதியவர்கள் எளிதில்ஏறி, காலை கீழே வைக்கும் வகையில் எளிதாக இருக்கிறதா என்பதை பார்க்கவும். சீட் போதுமான அகலத்துடன் குஷனிங்குடனும் உள்ளதா, நெரிசலின்றி வசதியாக உட்கார முடிகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். பின்னால் அமர்பவர் கைகளால் இறுக்கமாக பிடித்துக்கொள்ள பிடிமானம் உள்ளதா எனப் பார்க்கவும். கூடுதல் ஆதரவிற்கு பேக்ரெஸ்ட் பொருத்துவது நலம். மேடு பள்ளங்கள் நிறைந்த பகுதியில் ஓட்டிப் பார்த்து, அதிர்வுகள் பின் இருக்கையில் அமர்ந்திருப்பவரை பாதிக்கிறதா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளவும். பின்னால் ஆள் இருக்கும்போது டிராஃபிக்கில் பைக்கை உங்களால் எளிதாகக் கையாள முடிகிறதா என்பதைச் சரிபார்க்கவும். பயணம் எவ்வளவு குறுகிய தூரமாக இருந்தாலும், பின்னால் அமரும் பெற்றோருக்கும் சரியான அளவில் பொருந்தக்கூடிய தலைக்கவசம் (Helmet) அணிவிப்பது கட்டாயமாகும்.

விலை: சுமார் ரூ.1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் நடைமுறைக்கேற்ற தேர்வு ஹோண்டா யூனிகார்ன். இதில் இடம்பெற்றுள்ள நீளமான, தட்டையான ஒற்றை இருக்கை (Single-piece seat) தாராளமான குஷனிங் வசதியைக் கொண்டுள்ளது. இதனால் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்பவர் இருவருக்கும் தாராளமான இடவசதி கிடைக்கிறது. கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள கிராப் ரெயில் மற்றும் இயல்பான ஃபுட்பெக் (Footpeg) அமைப்பு, பின்னால் அமர்பவர் சிரமமின்றி வசதியாக உட்கார உதவுகிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பு சாலைகளில் உள்ள குழிகள், மேடு பள்ளங்களைச் சிறப்பாகக் கையாண்டு அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்வதால், பின்னால் அமர்ந்திருப்பவருக்கு அலுப்பில்லாத மென்மையான பயண அனுபவம் கிடைக்கிறது.

விலை: ரூ.1.30 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்)

சாதாரண கம்யூட்டர் பைக்குகளைத் தாண்டி சற்று வித்தியாசமான தோற்றமும் செயல்திறனும் விரும்புவோருக்கு டிவிஎஸ் ரோனின் ஒரு சிறந்த தேர்வு. இதில் உள்ள அதிர்வுகள் குறைந்த எஞ்சின், குறைந்த வேகத்திலும் எளிதாக இழுக்கும் திறன் மற்றும் வசதியான எர்கோனாமிக்ஸ் ஆகியவை அன்றாட பயன்பாட்டை எளிதாக்குகின்றன. வளைவுகளிலும் மேடு பள்ளங்களிலும் இந்த பைக் மிகச் சிறப்பான சமநிலையை வெளிப்படுத்துகிறது.

இதன் ரிலாக்ஸ்டான இருக்கை அமைப்பு பின் இருக்கை பயணிக்கு நல்ல சௌகரியத்தைத் தருகிறது. மேலும், டிவிஎஸ் நிறுவனம் கூடுதல் உபகரணமாக (Accessory) பேக்ரெஸ்ட் (Backrest) வசதியை வழங்குகிறது. முதுகுக்குப் பிடிமானம் தேவைப்படும் வயதான பெற்றோருக்கு இந்த பேக்ரெஸ்ட் மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும்.

விலை: ரூ.1.67 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்)

ராயல் என்பீல்ட் புல்லட் 350, நேராக நிமிர்ந்து அமர்ந்து பயணிக்கும் சௌகரியமான ரைடிங் பொசிஷனைக் கொண்டது. இதன் மிதமான சீட் உயரம் காரணமாக, வயதானவர்கள் எளிதாக ஏறி இறங்க முடிகிறது. சாலையில் புல்லட் தரும் கம்பீரமான நிலைத்தன்மையும் (Planting effect), கரடுமுரடான சாலைகளை உள்வாங்கும் அதன் சஸ்பென்ஷன் அமைப்பும் பின்னால் அமர்பவருக்குப் பாதுகாப்பான உணர்வைத் தருகிறது. எனினும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இதன் எடை. குறைந்த வேகத்திலோ அல்லது போக்குவரத்து நெரிசலிலோ பின்னால் ஆட்களை வைத்துக்கொண்டு இந்த கனமான பைக்கை பேலன்ஸ் செய்வது ஓட்டுநருக்கு சற்று சவாலாக இருக்கலாம். பைக்கின் எடையைச் சமாளிக்க முடியும் என்பவர்கள் மட்டுமே இதைத் தேர்வு செய்யலாம்.

விலை: ரூ.1.93 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்)

உங்க பெற்றோருக்கு பைக்கின் அதிரும் சத்தமோ அல்லது திடீர் ஜெர்க்கோ பிடிக்காது என்றால், நீங்கள் தாராளமாக ஹோண்டா ஹைனெஸ் CB350 பைக்கை பரிசீலிக்கலாம். இதன் எஞ்சின் மிகவும் மென்மையானது; அதிர்வுகளற்ற பயண அனுபவத்தை வழங்கக்கூடியது. வேகத் தடைகள், மேடு பள்ளங்களை இதன் சஸ்பென்ஷன் சிறப்பாக கையாள்வதால் நீண்டதூர பயணங்களிலும் களைப்பு தெரியாது. விசாலமான சீட் மற்றும் நிதானமான பயணத்தை விரும்பும் குடும்பத்தினருக்கு இந்த பைக் சரியான தேர்வு.

விலை: சுமார் ரூ.2.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)

நவீன கிளாசிக் தோற்றத்தை விரும்பும் ரைடர்களுக்கு ஜாவா 42 எஃப்ஜே ஒரு சிறந்த மாடல். இதன் நிமிர்ந்த ரைடிங் பொசிஷன் நீண்ட தூரப் பயணங்களை எளிதாக்குகிறது. ஆனால், வயதான பெற்றோரை இதில் அழைத்துச் செல்ல திட்டமிட்டால் 2 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, முதியவர்களின் முதுகுப் பிடிமானத்திற்காக தனியாக ஒரு பேக்ரெஸ்ட் (Backrest) பொருத்துவது நல்லது. இரண்டாவதாக, இதன் பின்னிருப்பு சஸ்பென்ஷன் சற்று கடினமாக (stiff) இருக்கக்கூடும் என்பதால், பின் இருக்கை பயணிக்கு ஏற்றவாறு சஸ்பென்ஷனை சற்று மெதுவான (softer preload) நிலைக்கு மாற்றியமைத்துக் கொள்வது சிறந்தது.