சென்னை,
எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஹரிஷ் கல்யாணின் திரைப்பயணம்
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் சீசனில் வைல்ட்கார்டு போட்டியாளராகப் பங்கேற்று ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’, ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’, ‘டீசல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.
சசி இயக்கத்தில் ‘நூறு கோடி வானவில்’
‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’, ‘நூறு சாமி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சசி, தற்போது ‘நூறு கோடி வானவில்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், சித்தி இட்னானி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மாதவ் மீடியா மற்றும் அருண் அருணாச்சலம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
நவம்பர் 6-ல் ரிலீஸ்
‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்க வெளியீட்டுக்குப் பதிலாக நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இப்படத்தைக் காண ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
நெகட்டிவ் பிஆர் இருக்கத்தான் செய்யும்
இந்த நிலையில், 'நூறு கோடி வானவில்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நெகட்டிவ் பிஆர் இருக்கத்தான் செய்யும் எல்லா விஷயத்திலும் நெகட்டிவ் பி.ஆர் இருக்கத்தான் செய்யும்; அதை நம்மால் தவிர்க்க முடியாது. மக்கள் ஒரு விஷயத்தை ரசித்துக் கைதட்டி கொண்டாடினால், அதற்கு மேல் வேறு எதுவும் தேவையில்லை. எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; அதைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் தொடர்ந்து பயணிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

