40, 50 வயதைக் கடந்த பிறகு அசைவம் சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா, கெட்டதா? எந்த மாதிரியான கறிகளைச் சாப்பிட்டால் நோய்கள் வரும்? இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

வயசானாலே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும் என்று பலரும் சொல்வார்கள். குறிப்பாக 40, 50 வயசுக்கு மேல் மட்டன், சிக்கன், மீன் சாப்பிடுவது பற்றி பல கருத்துகள் உள்ளன. ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அசைவம் உடம்புக்குக் கெடுதலா என்றால், இல்லை என்பதுதான் பதில். நீங்கள் எந்த வகையான கறியை, எவ்வளவு அளவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் அதன் விளைவுகள் இருக்கும். இதன் உண்மையான பின்னணியை இப்போது பார்ப்போம்.

Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!

வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்கள் நடக்கும். இந்த நேரத்தில் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மட்டன், பீஃப் மற்றும் சாசேஜ், பேக்கன் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை (Processed Meat) அதிகமாகச் சாப்பிடுவது உடம்புக்குக் கெடுதல். இவற்றில் சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் உப்பு அதிகமாக இருக்கும். இதனால் கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் வர வாய்ப்புள்ளது. மேலும், ரெட் மீட் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிட்டால் குடல் புற்றுநோய் வரும் அபாயமும் உள்ளது.

Kanda Sashti Viratham 2026: கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? 6 நாட்களும் என்ன சாப்பிடலாம்? முழு வழிமுறைகள் இதோ!

ரெட் மீட் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவதைக் குறைத்துவிட்டு, பழங்கள், பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களைச் சாப்பிடுவது உடம்புக்கு நல்லது. சைவ உணவுகளில் அதிக அளவு நார்ச்சத்து கிடைக்கும். இது செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்க உதவும். சரியான சைவ உணவு முறை உடல் எடை, ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். ஆனால், அசைவத்தை நிறுத்துவதால் மட்டுமே நோய்கள் வராது என்று சொல்ல முடியாது. சரியான உணவுப் பழக்கம், தினமும் உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவையும் கட்டாயம் தேவை.

TNPSC Group 4: அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! 6,574 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி.!

நீங்கள் அசைவத்தை முழுமையாக நிறுத்த முடிவு செய்தால், உடலில் புரதச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வயதாகும்போது தசைகளை வலுவாக வைத்துக்கொள்ள புரதம் மிகவும் அவசியம். இதற்காக உங்கள் உணவில் பருப்பு வகைகள், பால், தயிர், பன்னீர், சோயாபீன், டோஃபு, ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துடன் வைட்டமின் B12, இரும்புச்சத்து மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் மீதும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். Vegetable Kit: ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள்! தீபாவளிக்கு தமிழக அரசு வழங்கும் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ – என்னென்ன காய்கறிகள் கிடைக்கும்?

முழுமையாகச் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் B12 குறைபாடு வர வாய்ப்புள்ளது. அதனால் தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனை செய்து, சப்ளிமெண்ட்ஸ் (Supplements) மாத்திரைகளை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து அசைவம் சாப்பிட விரும்பினால், மட்டன் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்குப் பதிலாக மீன் அல்லது தோல் நீக்கிய சிக்கனை அளவோடு சாப்பிடலாம். இவற்றை குறைந்த எண்ணெயில், சரியான முறையில் சமைத்துச் சாப்பிடுவது உடம்புக்கு மிகவும் நல்லது.

8th Pay Commission Pension Hike:8-வது ஊதியக் குழு அப்டேட்! ரியல் ஜாக்பாட்.! ஒன்றரை லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்குமா?