அமெரிக்காவில் நேற்று (நவம்பர் 3) மிட் டேர்ம் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இது அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் தேர்தல் ஆகும்.

எத்தனை இடங்கள் பெரும்பான்மை?

இதில் கீழ்சபை (US House of Representatives) 435 இடங்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெற குறைந்தது 218 இடங்களைப் பிடிக்க வேண்டும்.

மேல்சபையான செனட் 100 இடங்களைக் கொண்டது. இதில் பெரும்பான்மை பெற 50 இடங்கள் தேவை.

அமெரிக்கா
அமெரிக்கா
இனி PF பேலன்ஸை வாட்ஸ்ஆப்பிலேயே பார்த்துக்கலாம்; வெப்சைட் டவுன் பிரச்னை எல்லாம் கிடையாது! | How to?

ட்ரம்ப் மீது அதிருப்தி

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது உலக அளவில் மட்டுமல்ல... அமெரிக்க மக்களுக்கே சற்று அதிருப்தி உள்ளது.

‘Make America Great Again’ என்கிற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியுள்ள மக்களை வெளியேற்றுவது, அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பது எனப் பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

மேலும், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் போரிலும் களமிறங்கி, இன்னமும் இந்தப் போரைத் தொடர்ந்து நடத்துவதில் குறியாக இருக்கிறார்.

பிற நாடுகளுக்கு வரி விதிக்கும்போது, அமெரிக்க மக்களும் விலைவாசி உயர்வைச் சந்தித்தனர்.

அடுத்ததாக, ஈரான் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. பணவீக்கமும் அதிகரித்து அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தையும் அதிகரித்துள்ளது.

இதிலெல்லாம் அமெரிக்க மக்களுக்குக் கடும் அதிருப்தி.

முன்னிலை..?

இந்த அதிருப்தி வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே தெரிந்துவருகிறது. இதுவரையிலான வாக்கு எண்ணிக்கையில், கீழ்சபையில் அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தலில் ட்ரம்ப் கட்சி வெறும் 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.

அமெரிக்கக் கட்சிகள் | சித்தரிப்புப் படம்
அமெரிக்கக் கட்சிகள் | சித்தரிப்புப் படம்
இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 84 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

செனட்டில் ஜனநாயகக் கட்சி 45 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றால், ட்ரம்ப் கொண்டுவரும் அதிரடி சட்டங்களுக்குக் கொஞ்சம் வேகத்தடை போட முடியும்.

ஆனாலும், அதிபரிடம் இருக்கும் ‘வீட்டோ’ சக்தி மூலம், அவர் தான் கொண்டுவரும் சட்டங்களைக் கொண்டுவரலாம். இருந்தாலும், அவருக்கு முன்பு இருந்த வீட்டோ பவர் இப்போது இல்லை என்பதே சற்று பின்னடைவுதான்.

இப்போது அமெரிக்காவில் வெளியாகி உள்ள கணிப்புகளின்படி, மிட் டேர்ம் தேர்தலில் ஜனநாயகக் கட்சியே (எதிர்க்கட்சி) பெரும்பான்மை பெறும் என்று தெரிகிறது.

என்ன முடிவு என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும். பார்ப்போம்!