சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒற்றுமை தினத்தில் குஜராத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி, ‘எதிர்க்கட்சிகளுக்கு வெளிநாடுகள் உதவி செய்கின்றன’ என்கிற குற்றம்சாட்டியிருந்தார்.
நேற்று முன்தினம் (நவம்பர் 2) இதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நீங்கள்தான் வெளிநாடு உதவியுடன் ஆட்சிக்கு வந்தீர்கள். இப்போதும் உங்களுக்கு வெளிநாட்டின் உதவி இருக்கிறது. இது குறித்து நேரடியாக விவாதம் செய்ய நான் தயார். தேதி மற்றும் இடத்தைச் சொல்லுங்கள்” என்று சவால் விடுத்திருந்தார்.
விவாதிக்க வாருங்கள்!
இந்தச் சவாலுக்கு மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால், ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “24 மணி நேரம் ஆகிவிட்டது, மோடி ஜி. நான் உங்களுக்குச் சவால் விடுத்திருந்தேன்.
எதிர்க்கட்சிகள் தேச விரோதிகள் என்று சொல்கிறீர்களே... எந்த மேடையையும், எந்த இடத்தையும் தேர்ந்தெடுங்கள். என்னுடன் விவாதிக்க வாருங்கள்.
யார் தேச விரோதி? வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பில் இருப்பது யார்? அவை என்ன மாதிரியான தொடர்புகள்? என முடிந்தவரை விரைவில் விவாதிப்போம். வாருங்கள். பயப்படாதீர்கள்.
என்னென்ன விவாதிக்கலாம்?
நிதி அமைப்பு, நிதி உள்கட்டமைப்பு, அமெரிக்க ஒப்பந்தம் எப்படி நடந்தது, ஏன் நடந்தது, ஏன் அவ்வளவு அவசரமாக நடந்தது, ஏன் நீங்கள் மட்டுமே தனித்து அந்த ஒப்பந்தத்தைச் செய்தீர்கள், அமைச்சரவைக்கு ஏன் தெரிவிக்கவில்லை, அதானி வழக்கு ஏன் முடிக்கப்பட்டது, எப்ஸ்டீன் (Epstein) விவகாரம் — எனப் பல விஷயங்கள் குறித்து கேள்விகள் எழும்.
அவை அனைத்தையும் பற்றியும் நாம் பகிரங்கமாக விவாதிப்போம்” என்று பதிவிட்டிருந்தார்.
நிர்மலா சீதாராமன் பதில்
ராகுல் காந்திக்குப் பதிலளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ராகுல் ஜி, விவாதம் நடத்துவதற்கு ஒரு இடத்தை அமைத்துத் தருமாறு நீங்கள் பிரதமரைக் கேட்கிறீர்கள். ஆனால் ஏற்கனவே அப்படிப்பட்ட ஒரு இடம் இருக்கிறது. அதுதான் நாட்டின் நாடாளுமன்றம்! .
அதில் நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பில் இருக்கிறீர்கள். நேற்றுதான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எஸ்.ஐ.ஆர் (SIR) மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் (EVM) குறித்து விவாதிக்க ஒரு சிறப்புக் கூட்டத்தொடருக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் சவால் விடுப்பதில் காட்டும் அதே ஆர்வத்தை, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதிலும் ஏன் நீங்கள் காட்டுவதில்லை?
பதில்களைக் கோரும் உங்களுக்கு, அந்தப் பதில்களைப் பொறுமையாகக் கேட்டுப் பெறும் கடமையும் இருக்கிறது என்பதை மறக்கக்கூடாது.
அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி...
நீங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அரசு பதிலளிக்கும்போதெல்லாம், நீங்களும் உங்கள் கட்சியும் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சந்தர்ப்பங்கள் பல உண்டு.
மறுதரப்பின் பதிலைக் கேட்கக் கூட அங்குத் தங்காமல் ஓடிவிடும் நீங்கள், விவாதத்திற்கு அவ்வளவு ஆர்வமாக இருப்பதாக எப்படி உரிமை கோர முடியும்?
வெறும் வெளிநடப்போடு இது நிற்பதில்லை. நீங்களும் உங்களது ‘இண்டி’ (INDI) கூட்டணியும் தொடர்ந்து அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, முழு அமர்வுகளையுமே வீணடித்துள்ளீர்கள்.
Rahul ji, you ask the Prime Minister to choose a venue for a debate. There is already one: Parliament, where you happen to be the LoP. Just yesterday, Home Minister Shri @AmitShah offered a special session to debate SIR and EVMs. Why not show the same enthusiasm for a debate in Parliament that you show while issuing challenges on social media? Demanding answers also carries an obligation to hear them. There have been several occasions when you and your party have walked out of Parliament while the government was responding to your allegations. How do you claim to be so eager for a debate when you don’t even stay to hear the other side? It doesn’t stop at walkouts. You and the INDI Alliance have repeatedly disrupted proceedings, leading to entire sittings being washed out. If you are so keen on debating, why not allow Parliament to function in the first place? And then there’s the mock Parliament you recently held at the Congress President’s residence. Frankly, that was more a ‘mockery of Parliament’ than a ‘mock Parliament’. You found the time and enthusiasm for that exercise. Surely, the real Parliament deserves at least as much. You speak endlessly about protecting democracy and the Constitution. But that respect should also reflect in how you treat the institutions they have established. As for the issues you frivolously raise, bring specific allegations and evidence to back them up. Simply throwing together a long list of accusations doesn’t make your case any stronger. As LoP, you are expected to show some seriousness and responsibility. You say, “Daro mat.” Then bring the facts, face the scrutiny and stay to hear the answers. In the House, uphold the standards of debate you demand from others.
— Nirmala Sitharaman (@nsitharaman) November 3, 2026
விவாதம் செய்வதில் உங்களுக்கு அவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்றால், முதலில் நாடாளுமன்றம் சுமுகமாக இயங்க ஏன் நீங்கள் அனுமதிப்பதில்லை?
நீங்கள் அலட்சியமாக எழுப்பும் விவகாரங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கான குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளையும் ஆதரவான ஆதாரங்களையும் கொண்டு வாருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

