நியூசிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. பலத்த எதிர்ப்புகளையும் மீறி இந்த டெஸ்ட்டிலும் முகமது சிராஜ் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இவ்விரு அணிகளும் மோதிய முதலாவது வெல்லிங்டன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இந்த நிலையில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள கேக்லே ஓவலில் இன்று (நவ. 27) தொடங்கவிருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், முதலில் பந்து வீசுவதாகத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் இளம்வீரர் குர்னூர் பிரார் முதல்முறையாக இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது சிராஜ், கடும் எதிர்ப்புகளையும் மீறி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேபோன்று நம்பர் ஒன் டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜாவும் நீக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்பர்ன் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணி கடந்த ஆறு ஆண்டுகள் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது முகமது சிராஜ் விளையாடியிருந்தார்.
கிறிஸ்ட்சர்ச்சில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சிராஜ் நீக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ், 43 விக்கெட்டுகளை வீழ்த்தி விக்கெட் வீழ்த்தியவர்களில் முன்னணியில் உள்ளார்.
இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் டாம் லாதம் 59 ரன்களும், டெவான் கான்வே 31 ரன்களும், ஹென்றி நிக்கோல்ஸ் 16 ரன்களும் எடுத்தனர். இந்திய அணித் தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், அன்ஷுல் காம்போஜ், குர்னூர் பிரார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
Mohammed Siraj's remarkable run of featuring in every full away Test series since his debut has finally come to an end, with India leaving the pacer out of their playing XI for the second Test against New Zealand in Christchurch.
