திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்பிணை, பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் ஊழல் உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அகல்விளக்கு பதிப்பபக உரிமையாளர் மோகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு விசாரணைக்கு வரவுள்ளது.
சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிடுவோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யக் கோரி தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கு விசாரிக்கப்படவுள்ளது.
வழக்குரைஞர்களுக்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைத்து தரக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்பிணை கோரியும் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் அவரது மகன் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

