‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ஹன்ட் ஃபார் கோல்லம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ என்பது ஜே. ஆர். ஆர். டோல்கீனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, பீட்டர் ஜாக்சன் இயக்கிய பல பாகங்களைக் கொண்ட காவிய பேண்டஸி திரைப்படத் தொடராகும்.

‘தி ஃபெல்லோஷிப் ஆஃப் தி ரிங்’ (2001) – முதல் பாகம், ‘தி டூ டவர்ஸ்’ (2002) – இரண்டாம் பாகம், ‘தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்’ (2003) – மூன்றாம் பாகம் வெளியானது.

‘தி லார்ட் ஆப் தி ரிங்ஸ்: தி ரிட்டர்ன் ஆப் தி கிங்’

பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் 2003ம் ஆண்டும் வெளியான இந்தப் படம், உலகளவில் கவனம் பெற்று பலராலும் வியந்து பாராட்டப்பட்ட ஒன்று. ஜே. ஆர். ஆர் டோல்கீன் எழுதிய ‘தி ரிட்டர்ன் ஆப் தி கிங்’என்று புத்தகத்தை மையமாகக் கொண்டு உருவான இந்தப் படம் 2004ம் ஆண்டு சிறந்த இயக்குநர், சிறந்த படம் என 11 ஆஸ்கர் விருதுகளை குவித்தது.

படத்தின் படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில், ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ஹன்ட் ஃபார் கோல்லம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது. ஆண்டி செர்கிஸ் இயக்கி, மீண்டும் கோல்லம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

பீட்டர் ஜாக்சனின் ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ திரைப்பட வரிசையில் உருவாகும் இப்படம், 2027ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

That’s a wrap! Well, almost. Production on The Lord of the Rings: The Hunt for Gollum has officially ended. Only in theaters December 2027. pic.twitter.com/mBb1Rmw70J

— Warner Bros. (@warnerbros) November 25, 2026