உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். தந்தை மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, கொள்கைப் பாதையில் முன்னேற வாழ்த்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிறந்தநாளையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. தலைவரும், தனது தந்தையுமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு உச்சி முகர்ந்து முத்தமிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!
Let your work define you!
உழைப்பால் உயர்ந்திடு!
இலட்சியப் பாதையில் முன்னேறு!
கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) November 27, 2026
சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம்… pic.twitter.com/Cu6aV6MlaH

மரியாதை
பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது இல்லம் முன்பு தி.மு.க. தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

