கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்று ஆளுநரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மனு அளித்தார்.

அப்போது தவெக அரசு மீதும் முதல்வர் விஜய் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின், இன்று ஆளுநரைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் இன்று காலை ஆளுநர் ஆர்.வி. அர்லேகரைச் சந்தித்து கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது உடனடி நடவடிக்கை கோரி மனு அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Opposition leader udhayanidhi stalin meets TN governor today on kallakurichi MLA issue

மன உளைச்சலுக்கு ஆளான ஆட்சியரும் அவர் கணவரும்; இருந்தும் துணிச்சல்! நீக்கப்பட்ட பதிவில் பெண் ஐஏஎஸ் அதிருப்தி