சென்னை,

முதல்-அமைச்சர் விஜய் நாளை மறுதினம் திருச்சிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

முதல்-அமைச்சர் விஜய் நேற்று திருச்சிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். திருச்சி, புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்க இருந்தார்.

ஆனால், கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மறைவு காரணமாக முதல்-அமைச்சர் விஜய்-யின் திருச்சி பயணம் ரத்து செய்யப்பட்டது.

முதல்-அமைச்சர் விஜய் பயணம்

இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்-யின் திருச்சி பயணம் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை மறுதினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்-அமைச்சர் விஜய் திருச்சி செல்கிறார்.

பின்னர், 18 கிலோ மீட்டர் ’ரோடு ஷோ’ செல்லும் முதல்-அமைச்சர் விஜய் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி, புத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவ கட்டிடங்களை திறந்து வைக்கும் முதல்-அமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்-அமைச்சர் விஜய்-யின் திருச்சி பயணத்தையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.