தங்கத்தின் விலை 16 ஆவது நாளாக சனிக்கிழமை(நவ.21) பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கு விற்பனையாகிறது. இதுவரை தங்கம் பவுனுக்கு ரூ.15,360 வரை குறைந்துள்ளது.

நவம்பர் முதலில் இருந்தே தங்கத்தின் விலை தொடா்ந்து சரிந்து வருகிறது. அதுவும் கடந்த ஒரு வாரமாக அதிரடியாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.99,760-க்கும், புதன்கிழமை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுன் ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும், வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980-க்கும், பவுனுக்கு ரூ.1,880 குறைந்து ரூ.95,840-க்கும், வெள்ளிக்கிழமை (நவ. 20) கிராமுக்கு ரூ.470 குறைந்து ரூ.11,510-க்கும், பவுனுக்கு ரூ.3,760 குறைந்து ரூ.92,080-க்கும் விற்பனையானது. விற்பனையானது.

இந்த நிலையில், சனிக்கிழமை (நவ. 21) கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும் விற்பனையானது. கடந்த 16 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.15,360 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகைப்பிரியர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேபோன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.9330-க்கும், பவுனுக்கு ரூ.720 குறைந்து ரூ.74,640-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ (கட்டி) வெள்ளி ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

வங்கிகள் நோட்டீஸ் அளித்து வருவதால் நெருக்கடி

தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருவது நகை வாங்குபவா்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், கல்வி, விவசாயம், திருமணம் போன்ற செலவுகளுக்காக வங்கிகளில், தனியார் நிறுவனங்களில் தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடனை திருப்பி செலுத்துமாறும், வட்டி தவணைத் தொகை செலுத்துமாறு நோட்டீஸ் அளிக்கப்பட்டு நெருக்கடி கொடுத்து வருவதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

Gold prices continue to fall: Do you know how much the price per sovereign has dropped today (Nov 21)?

தங்கம் விலை சரிவு நகை! வாங்குவோருக்கு மகிழ்ச்சி; அடகு வைத்தவா்களுக்கு நெருக்கடி!