சென்னை,
2026-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொழிலாளர் நல நிதியை ஜனவரிக்குள் நிறுவனங்கள் செலுத்த அறிவுறுத்தல்
தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் பங்கு ரூ.20 மற்றும் நிறுவனத்தின் பங்கு ரூ.40 என ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.60 என கணக்கிடப்பட்டு தொழிலாளர் நல நிதி தொகையினை தொழிலாளர் நல வாரியத்துக்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான (2026) தொழிலாளர் நல நிதியை அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
தொழிலாளர் நல வாரியத்தில் 2026-2027-ம் ஆண்டுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத் தொகை மற்றும் பாடநூல் உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பங்களை www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 'செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-06' என்ற முகவரிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

