திருச்செங்கோட்டில் கைப்பேசி விற்பனைக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி விற்பனை செய்தவரை நகர காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையப் பகுதியில் நகர காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கைப்பேசி விற்பனைக் கடையில் அதிகமானோா் கூடியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த காவல் துறையினா், அங்கு சோதனை நடத்தினா்.
இதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கடையில் இருந்த 40 புகையிலைப் பொட்டலங்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினா், கடை உரிமையாளா் விநாயக பெருமாளைக் (54) கைது செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

