சென்னை: தமிழ்​நாடு தேசிய நலவாழ்வு குழு​மத்​தின் இயக்​குநர் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பு: ஒருங்​கிணைந்த அவசர கால மகப்​பேறு, பச்​சிளம் குழந்தை பராமரிப்பு மையங்​களில் ஒப்பந்த அடிப்படை​யில் தற்​காலிக​மாகப் பணி​யாற்ற தகு​தி​யான செவிலியர்​களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

மொத்த காலி​யிடங்​கள் 1,695. தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.21 ஆயிரம் வழங்​கப்​படும். விண்​ணப்​ப​தா​ரர்​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட கல்​லூரி​களில் நர்​சிங் பாடத்​தில் பிஎஸ்சி அல்​லது டிப்​ளமா படித்​திருக்க வேண்​டும்.

வயது 50-க்​குள் இருக்க வேண்​டும். விண்​ணப்​பப் படிவம், மாவட்ட வாரி​யான காலி​யிட விவரங்​களை www.nhm.tn.gov.in என்ற இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை மாவட்ட நலவாழ்வு சங்​கம், நகர நலவாழ்வு சங்க அலு​வல​கத்​தில் டிச.4-ம் தேதி மாலை 5 மணிக்​குள் சமர்ப்​பிக்க வேண்​டும்.

அரிசி இருப்பு வரம்பை உயர்த்த வேண்டும்: வணிகர் சங்கங்களின் பேரவை கோரிக்கை