திருச்சி: எதுவுமே எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க முடியும் என தவெகவின் 6 மாத ஆட்சி குறித்து தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
மாநில நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என முதல்வர் விஜய் கூறியதை வரவேற்கிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிச்சயமாக காங்கிரஸ் முதுகில் குத்தும்.
நாங்கள் எந்தக் கட்சியுடனும் மறைமுகக் கூட்டணியில் இல்லை. தவெகவை எதிர்ப்பது போலவே திமுகவையும் எதிர்க்கிறோம். திமுக - பாஜக கூட்டணி நிச்சயமாக இல்லை. தமிழகத்தில் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ; கைகள் உயர்கிறதோ இல்லையோ; தாமரை மலர்ந்தே தீரும். இதில் விசில் குறித்து நான் பேசமாட்டேன். அவர்கள் எங்களுக்கு போட்டியே இல்லை.
தவெகவின் 6 மாத ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. எதுவுமே எழுதாத விடைத்தாளுக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க முடியும்? மக்கள் மனம் குளிரும்படி ஆட்சி செய்ய வேண்டுமே தவிர, டாஸ்மாக் குளிரும்படி ஆட்சி செய்யக் கூடாது.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் முருகனுக்கு இணையாக முதல்வர் விஜய்க்கு அரோகரா கோஷம் எழுப்பியதை முருக பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
எனக்கு சொந்தமாக கார் எதுவுமில்லை: சு.வெங்கடேசன் எம்.பி. விளக்கம்
