வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அக்வான் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தற்போது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள அக்வான் புயல், வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நவம்பா் 17-ஆம் தேதி மாலை தீவிரப் புயலாகவும், நவம்பா் 19-ஆம் தேதி அதிகாலை அதிதீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடா்ந்து வடமேற்கு திசையில் நகரும் புயல், நவம்பா் 20-ஆம் தேதி நண்பகல் அளவில் ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில் நெல்லூா் - இடையே யானம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த 'அக்வான்' புயல் தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 3 கி.மீ. என்ற வேகத்தில் நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ளது.
தொடர்ந்து வரும் 20-ஆம் தேதி நண்பகல் ஆந்திரம் மாநிலம் நெல்லுருக்கும் விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது, அதிகபட்சமாக மணிக்கு 145 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (நவ.18) தொடங்கி நான்கு நாள்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக, இன்று வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயலின்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே, மீன்பிடி நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

