சென்னை,
வ.உ. சிதம்பரனார் 1936 நவம்பர் 18 அன்று தனது 64-ஆம் வயதில் தூத்துக்குடியில் மறைந்தார். அவரது நினைவு நாளான இன்று அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்
இந்த நிலையில், நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நம் நாட்டின் விடுதலைக் கனவுகளுக்குத் திசைகாட்டிய கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்குப் புகழ்வணக்கம்!
சுதேசிக் கப்பலைச் செலுத்தியவர்!
உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுத்தவர்!
செக்கிழுத்துச் சிதைக்கப்பட்டபோதும் சிந்தனையில் சுதந்திரத்தைச் சுமந்தவர்!
என்றும் அழியாது
சிறைக்கொட்டடியிலும் செந்தமிழைச் செழிக்கச் செய்தவர்!
நமது திராவிட மாடல் அரசில், அத்தகைய தியாகச் செம்மலின் புகழைப் போற்றி, அவரது சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம்! அந்த முயற்சிகளுக்குத் தற்போதுள்ள ‘U-Turn’ அரசில் எக்காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டுவிடக் கூடாது.
நம் மண்ணில் அவர் பதித்த கொள்கைத் தடம் காலத்தால் என்றும் அழியாது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

