சென்னை,
ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான இந்த பாடல் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அந்த வகையில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அரிகொம்பன்’.
முக்கிய கதாபாத்திரங்களில்...
மிதுன் மகேஸ்வரன் எழுதி, இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் சஜிஷ்ணா சேவியர், தேவிகா கிருஷ்ணன், இயக்குநர் சுப்ரமணியம் சிவா, அப்புக்குட்டி, ஆதிரா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காட்டுப் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 11-ல் ரிலீஸ்
‘அரிகொம்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் வெளியிட்டார். காடுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது. இந்த டீசர், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
இந்த நிலையில், இந்த படத்திலிருந்து செங்காட்டு தேவதையே' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். பாடல் வரிகளை கவிலன் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் குரலில் வெளியான இந்த பாடல் தற்போது இணையத்தில் கவனத்தை பெற்று வருகிறது.

