திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் சண்முகம் (வயது: 57) என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ குமரன் மாடர்ன் ரைஸ் மில் இயங்கி வருகிறது.

இந்த ஆலை கடந்த 27.10.2022 முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரிசி அரைக்கும் உரிமம் பெற்று முகவராகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், 2026 ம் ஆண்டு முதல் அரிசி ஆலைக்குச் சுமார் 3,710 மெட்ரிக் டன் நெல், அரிசியாக மாற்றித் திரும்ப ஒப்படைக்கும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின்படி, நெல் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் அதற்குரிய அரிசியை வாணிபகழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

vanitha

அந்த அரிசி அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக அனுப்பப்படும். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9 -ம் தேதி மற்றும் அக்டோபர் 10- ம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது, வழங்கப்பட்ட நெல்லுக்கு இணையான அரிசி வாணிபக் கழகத்திடம் ஒப்படைக்கப்படாமலும், சம்பந்தப்பட்ட அரிசி ஆலையின் இருப்பில் இல்லாததும் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அரிசி ஆலையின் உரிமையாளர் சண்முகம் (வயது: 57), அவரது மனைவி வனிதா (வயது: 47), இவர்களது மகனும் ஒப்பந்த உரிமதாரருமான ரெங்கராஜன் (வயது: 26) ஆகியோர் அரசு நியாயவிலைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசியை முறைகேடாகக் கையாடல் செய்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் அரசுக்கு ரூ.22,20,24,916 இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

rengarajan

இதுகுறித்து, திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திருச்சி மண்டல மேலாளர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சண்முகம், அவரது மனைவி வனிதா (வயது: 47), மகன் ரெங்கராஜன் (வயது: 26) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு நியாய விலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய அரிசியில் ரூ. 22 கோடிக்கு மேல் ஒரு குடும்பமே சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது, திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லண்டன் படிப்பு ஆசைகாட்டி ரூ.20 கோடி மோசடி... சதிவலையில் சிக்கிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள்!