சமந்தாவின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆடம்பரமான போட்டோஷூட் இல்லாமல் மிகவும் இயல்பான முறையில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவரது அணுகுமுறையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நடிகை சமந்தா

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள இவர், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இவர் இயக்குநர் ராஜ் நிடிமோருவை கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இந்தத் தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் பாரம்பரிய முறைப்படி சீமந்தம் நிகழ்ச்சியையும் நடத்தினர்.

கடந்த ஜூன் மாதம் 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெற்றி விழாவில் தனது கர்ப்பம் குறித்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறப்பை முன்னிட்டு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துவிட்டு சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும், பின்னர் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எளிமையான மகப்பேறு புகைப்படம்

இந்நிலையில், சமந்தா பகிர்ந்துள்ள எளிமையான மகப்பேறு புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுவாக நடிகைகள் கர்ப்பகாலத்தை நினைவுகூரும் வகையில் ஆடம்பரமான உடைகள் மற்றும் அலங்காரங்களுடன் மகப்பேறு போட்டோஷூட் நடத்துவது வழக்கம்.

ஆனால், சமந்தா அதற்கு மாறாக மிகவும் எளிமையான முறையில் தனது கர்ப்பகால புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். சோபாவில் இயல்பாக அமர்ந்திருக்கும் அவர், தனது வயிற்றைப் பிடித்தபடி போஸ் கொடுத்துள்ளார். சிவப்பு நிற மேலாடை, வெள்ளை நிற பேண்ட் மற்றும் கருப்பு நிறக் கண்ணாடி அணிந்திருந்த அவர், இந்தப் புகைப்படத்துடன், 'இதையே எனது மகப்பேறு போட்டோஷூட்டாக எடுத்துக்கொள்ளுங்கள்' (Consider this my maternity shoot) என்று குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

சமந்தாவின் இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆடம்பரமான போட்டோஷூட் இல்லாமல் மிகவும் இயல்பான முறையில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவரது அணுகுமுறையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

View this post on Instagram

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)