திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 10) விசாரணைக்கு வரவுள்ளன.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம், அனுமதிப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 400 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பிணை கோரிய வழக்கில் ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக ரூ. 1 கோடி ரூபாய் மானநஷ்டஈடு கோரி வழக்கு தொடர திமுகவுக்கு அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்து அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு
தனக்கெதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய கோரி திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு
டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பேருந்து கட்டணத்தை உயர்த்த, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு
தனக்கெதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி போடி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு
முன்பிணை கோரி சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கு
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையை முடிக்க மூன்று மாத அவகாசம் கோரி சிபிஐ நீதிமன்றம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வருகிறது
தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் விசாரணை இல்லை

