கடலூரில் பிரித்விராஜ் என்பவரை வெட்டிக்கொன்ற கொலையாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
கடலூரில் ரெட்டிச்சாவடியில் மதுபோதையில் பிரித்விராஜ் என்ற ரவுடியை பீர் பாட்டிலால் குத்திக்கொன்றுவிட்டு 2 ரவுடிகள் தப்பி ஓடினர். இருவரில் ஒருவர் பிடிபட்ட நிலையில், மற்றொருவர் போலீசை தாக்கிவிட்டு தப்ப முயன்றார்.
இதையடுத்து, முந்திரி காட்டில் பதுங்கியிருந்த அருளரசை பிடிக்க முயன்றபோது காவல் உதவி ஆய்வாளர் முகிலனை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றார்.
அப்போது கொலையாளி அருளரசின் கணுக்காலில் துப்பாக்கியால் சுட்டு ஆய்வாளர் இளவரசி பிடித்தார்.
காயமடைந்த ரவுடி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் முகிலன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

