தேனியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த போதை இளைஞர்களை தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எழுத்தர் ஆக பணியாற்றி வந்தவர் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் (56). அல்லிநகரம் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் இவர், தனது பணியை முடித்து வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தார்.

அப்போது தேனி சமதர்மபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது மதுபோதையில் இருந்த ஒரு இளைஞர் கும்பல் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதனை கண்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் போதை கும்பலிடம் சாலையை மறிக்காதீர்கள் என்று கூறியதை தொடர்ந்து அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இளைஞர்கள் செய்யும் அடாவடியை தனது கைபேசியில் செந்தில்குமார் விடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்த இளைஞர் கும்பல் சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில்குமாரை தாக்கியுள்ளனர். இதில் மயக்கம் அடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற சமதர்மபுரம் பகுதிக்கு வந்த காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கெளதம் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் சாலையை மறித்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் கும்பலை தட்டிக்கேட்ட சிறப்பு சார்பு ஆய்வாளரை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Reels filmed while blocking a road in Theni; Sub-Inspector murdered after confronting those responsible!

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கொலை!