தீபாவளியையொட்டி மக்கள் பட்டாசு வெடித்ததால் காற்றுமாசு ஏற்பட்ட நிலையில், சென்னையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் திங்கள்கிழமை காலை முதலே மழை விட்டு விட்டு பெய்த நிலையில், பட்டாசு வெடிப்பது சற்று குறைந்திருந்த நிலையில், மாலையில் மழை விட்டவுடன் மக்கள் அதிகளவிலான பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கினர்.

இதன் எதிரொலியாக உலகளவிலான காற்றின் தரக் குறியீட்டு வரைபடத்தில் சென்னையில் காற்றின் தரக் குறியீடு கடுமையான பிரிவில் இடம்பெற்றது.

நேற்றிரவு 8 மணி நிலவரப்படி, உலகளவில் காற்று மாசுபாட்டில் முதலிடம் பிடித்த சென்னை நகரின் காற்றின் தரக் குறியீடு 907 புள்ளிகளாக அபாய கட்டத்தை எட்டியது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் புகைமூட்டம் சூழ்ந்ததால், நேற்றிரவு விமானங்கள் தரையிறங்க முடியாமலும், புறப்பட முடியாமலும் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பல்வேறு நகரங்களிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரையிறங்கின.

மேலும், சென்னையிலிருந்து புறப்படவிருந்த 15-க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று நள்ளிரவு தாமதமாக இயக்கப்பட்டன.

Air pollution! Flight services in Chennai affected!

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் கொலை!