சென்னை,
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் துருவ் விக்ரம். இவர் நடிக்கும் புதிய திரைப்படமான 'ஜாக்கி' படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது.
'பைசன்' வெற்றிக்குப் பிறகு அடுத்த படம்
நடிகர் விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து தனது தந்தை விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் நடித்தார்.
சமீபத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். கபடி வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், துருவ் விக்ரமின் நடிப்பும் பாராட்டுகளைப் பெற்றது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் 'ஜாக்கி'
தற்போது துருவ் விக்ரம் தனது அடுத்த திரைப்படமான 'ஜாக்கி'யில் நடிக்க உள்ளார். இது அவருக்கு 4-வது திரைப்படமாகும். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கரண் அரவிந்த் குமார் இயக்குகிறார். இப்படத்தில் பிருத்வி பாண்டியராஜ், சாய் தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். துருவ் விக்ரமும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் முதல் முறையாக இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்
'ஜாக்கி' திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரொமான்டிக் ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாக உள்ளது. இதனால் படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று தொடங்கும் படப்பிடிப்பு
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜாக்கி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க உள்ளது. 'பைசன்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் இப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Wishing you all a very Happy Diwali ✨ #Jackie shoot begins tomorrow ICYM the #Jackie First Move Tamil ▶️ https://t.co/WVkZW9vbmn Telugu ▶️ https://t.co/J8x3zJ8ARA #Dhruv is J✭CKIE Directed by @karanAkumar12 A @Music_Santhosh musical Produced by @MythriOfficial @WriterSaby @viki_dop @chiya_1009 @PraveenRaja_Off #GMSekhar @vm_mor @AMBANINSK @Tseries
— Mythri Movie Makers (@MythriOfficial) November 8, 2026

