சென்னை,

ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மரகத நாணயம்-2' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவான திரைப்படங்களில் ஒன்று 'மரகத நாணயம்'. கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பேண்டஸி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இரண்டாம் பாகமாக உருவாகும் 'மரகத நாணயம்'

முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டது. அதன்படி, தற்போது 'மரகத நாணயம்-2' திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தைத் தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம், ஆக்சஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ளனர். மேலும், பிரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தைப் போலவே மர்மம், நகைச்சுவை மற்றும் பேண்டஸி அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது.

நிறைவடைந்த படப்பிடிப்பு

'மரகத நாணயம்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இதனை படப்பிடிப்பு தள வீடியோ வெளியிட்டு படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படத்தின் அடுத்தகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெளியானது பர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்த நிலையில், ஆதி நடிக்கும் 'மரகத நாணயம்-2' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களை கவருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Chase. Heist. Mystery. Fantasy. People. All driven by one obsession - The Maragadha Naanayam. Presenting the first look of #MaragadhaNaanayam2 | #MaragadhaMani2 Written and Directed by @ArkSaravan_Dir Starring @aadhiofficial @priya_Bshankar @nikkigalrani #Sathyaraj @Danielanniepope #Munishkanth @Arunrajakamaraj #Anandaraj @PassionStudios_ @AxessFilm @goodshow_offl @DangalTV @RDCMediaPvtLtd @ActorDev_offl @DuraiKv @dhibuofficial @deepakdmenon @Thirumalai_edit @PC_stunts @Udaykumar_mix @chandru_89k @Synccinema @KiranRaghavan_ @DoneChannel1 @SureshChandraa @AbdulNassarOffl @UrsVamsiShekar @prathool @thinkmusicindia @SoundariyaaS @KVMothi @Decoffl_ #MNM2 #MM2

— Aadhi (@AadhiOfficial) November 7, 2026