சென்னையில் நேற்று நடைபெறவிருந்த WTA 250 சென்னை ஓபன் போட்டியில், காற்று மாசுபாடு ஏற்பட்டு அதிகமான பூகைமூட்டம் காணப்பட்டதால், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

சென்னையில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் WTA 250 சென்னை ஓபன் இறுதி போட்டி நடைபெற்றது.

இந்த டென்னிஸ் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஜானிஸ் ஜென் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த மாக்டா லினெட் ஆகியோர் மோதினர்.

காற்று மாசுபாடு

அப்போது தீபாவளி பண்டிகையின் காரணமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு, காற்றின் தரம் குறைந்து காணப்பட்டது. மேலும் ஆட்டம் ஆரம்பித்தபோது மழை குறுக்கிட்டதால், போட்டியை தொடர முடியாத சூழல் நிலவியது.

இதன் காரணமாக நேற்று நடைபெறவிருந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டு, இன்று மீண்டும் காலை 11:00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் இரட்டையர் பிரிவு

முன்னதாக நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் வைஷ்ணவி அட்கர் மற்றும் ருதுஜா போசலே ஆகியோர் இணை, சுவிட்சர்லாந்தின் சிமோனா வால்டர்ட் மற்றும் நைமா கரமோகோ இணையிடம் 2-6, 0-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்திருந்த போதிலும், WTA டூர்-லெவல் இரட்டையர் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை பெற்றனர்.

Even clapping during the play is discouraged in Tennis. But in Chennai Open players are expected to play the final in this sound. It is like an active war zone out here. Interesting game it will be. Note: This is the quietest it has been in a while. It is way louder. https://t.co/HUVfk9i22e

— Ramasamy Jayaprakash (@ramasamyjp) November 8, 2026